Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாலஸ் தமிழ் மன்றம் தொடக்க விழா!

பிளானோ: டாலஸ் நகரில் 'டாலஸ் தமிழ் மன்றம்' என்ற அமைப்பு வரும் 24-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

'டாலஸ் தமிழ் மன்றம்' என்ற அமைப்பு தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு, லாப நோக்கமற்ற, மத சார்பற்ற தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தொடக்க விழா வரும் 24-ம் தேதி (சனிக்கிழமை) டாலஸ் நகர், பிளானோவில் உள்ள பவுலர் மிடில் பள்ளியில் நடக்கிறது. இந்த தொடக்க விழாவில் முனைவர் கோபாலகிருஷ்ணன் ராமசாமி (President of Greater Houston Tamil School) மற்றும் ச.வரதராஜன் (அறிவியல் வல்லுநர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இந்த அமைப்பானது, டாலஸ் மாநகரிலும், இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சகத் தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டுதல்; தமிழர் மொழி, கலாசாரத்தையும் மரபுகளையும் பேணி காத்தல்; புலம் பெயர்ந்து வந்து இங்கு வாழும் தமிழ் சமுதாயத்துக்குத் தேவையான உதவிகள் செய்தல்;

குடியுரிமை (Immigration), பிரச்னைகளுக்கான ஆலோசனை (counseling) ஏற்பாடு செய்தல்; வருகை தரும் பெற்றோர்களுக்கான மருத்துவம் மற்றும் காப்பீடு (visiting parents medical & insurance) ஆகியவற்றுக்கான ஆலோசனைகள், உதவிகள் செய்தல்;

டாலஸ் நகருக்கு சமீபத்தில் குடிபெயர்ந்தோர்க்குத் தேவையான தகவல்கள், சிறந்த பள்ளி போன்ற பல்வேறு தளங்களில் சரியான உதவிகளைச் செய்ய முகாம்களையும், பயிற்சிப் பட்டறைகளையும், உதவி தொலைபேசி எண்களையும் (Help Lines) ஏற்பாடு செய்தல்; நீண்ட நாள் திட்டமாக அனைத்து வசதிகள் கொண்ட ஒரு சமுதாயக் கூடம் (Community Center) அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ