Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அணு ஆயுதக்குவிப்பில் பாகிஸ்தான் தீவிரம்: அமெரிக்கா பரபரப்பு தகவல்!

வாஷிங்டன்: அணு ஆயுதக்குவிப்பில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்கா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வாஷிங்டனில் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அணு விஞ்ஞானிகள் ஹான்ஸ் கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ்.நாரீஸ் ஆகியோர் பாகிஸ்தானின் அணு ஆயுதக்குவிப்பு பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். அதில், ''பாகிஸ்தான் 2020-ம் ஆண்டுக்குள் 60 முதல் 70 அணுக்குண்டுகள் வரை குவித்துவிடும் என அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பு 1999-ம் ஆண்டு கணித்திருந்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே 2006-2007 ஆண்டிலேயே அதை அந்த நாடு எட்டி விட்டது.

இனி வரும் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணு ஆயுதக்குவிப்பில் எவ்வளவு துரிதமாக ஈடுபடும் என்பதை இரண்டு அம்சங்கள் நிர்ணயிக்கும். ஒன்று, அந்த நாடு வைத்திருக்கும் அணுத்திறன் ஏவுகணைகள், மற்றொன்று இந்தியாவின் அணு ஆயுத பெருக்கம். பாகிஸ்தானிடம் 2011-ம் ஆண்டு 90 முதல் 110 அணுக்குண்டுகள் வரை கைவசம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அந்த நாட்டிடம் 110 முதல் 130 அணுக்குண்டுகள் வரை இருக்கும் என மதிப்பிடுகிறோம்.

இன்னும் 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அணு ஆயுதக்கையிருப்பு மேலும் அதிகரிக்கும். அதே நேரத்தில் 2025-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் 350 அணுக்குண்டுகள் கையிருப்பு என்ற நிலையுடன் உலகின் 3வது பெரிய அணு ஆயுத நாடாக உருவெடுக்கும் என்பதை நாங்கள் நிராகரிக்கிறோம். 10 ஆண்டுகளில் அந்த அளவுக்கு அணு ஆயுதங்களை குவிக்கிற அளவுக்கு அவற்றை உற்பத்தி செய்கிற வசதி வாய்ப்புகளை அந்த நாடு பெருக்கிவிட முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அந்த நாட்டின் தற்போதைய நிலவரம், எதிர்கால கணிப்பு எல்லாவற்றையும் ஆய்வு செய்கிறபோது, 2025-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் அதிகபட்சமாக 220 முதல் 250 அணுக்குண்டுகள் வரை குவிக்கலாம். அது நடந்துவிட்டால், உலகின் 5வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவெடுக்கும்.

2014-ம் ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தானிடம் 3 ஆயிரத்து 100 கிலோ எடையுள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம், 170 கிலோ ஆயுத தரம் கொண்ட புளுட்டோனியம் கையிருப்பு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. இந்த பொருட்கள், 200 முதல் 300 அணுக்குண்டுகள் வரை தயாரிக்க போதும். அந்த நாட்டின் யுரேனியம் செறிவூட்டும் திறனையும், 4 புளுட்டோனியம் உற்பத்தி அணு உலைகள் செயல்பாட்டில் இருப்பதையும் பார்க்கிறபோது, ஆண்டுக்கு 14 முதல் 27 அணுக்குண்டுகள் வரை தயாரிக்க முடியும்.

பாகிஸ்தான் தற்போது, அணு ஏவுகணைகளை கொண்டுள்ளது. மேலும் 2 அணு ஏவுகணைகளை அந்த நாடு தயாரித்துக் கொண்டிருக்கலாம். பாகிஸ்தான் தரையில் இருந்து ஏவக்கூடிய பாபர், ஹாட்ப்-7 ஏவுகணைகளையும், விண்ணில் இருந்து ஏவக்கூடிய ராட் அல்லது ஹாட்ப்-8 ஏவுகணைகளையும்கூட உற்பத்தி செய்து கொண்டிருக்கலாம். நீர்மூழ்கிக்கப்பல்களுக்காக பாகிஸ்தான் அணுக்குண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ