Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கார்களுக்கு தடை!

நார்வே தலைநகர் ஓஸ்லோவில்,  அனைத்து கார்களுக்கும் வரும் 2019-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுகிறது. இதனால் உலகில் கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்ட முதல் பெரிய நகரம் என்ற பெருமையை ஓஸ்லோ பெறவுள்ளது.

நார்வேயின் மிகப் பெரிய நகரமான இங்கு 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் ஓடுகின்றன. போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசடைவதை தடுக்கும் வகையிலும் இங்கு அனைத்து கார்களுக்கும் தடை விதிக்க முடிவு செயயப்பட்டுள்ளது.

வரும் 2019-ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்.பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு சைக்கிளில் செல்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு முன், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 2020-ம் ஆண்டு முதல் கார்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓஸ்லோவை விட மிகப்பெரிய நகரமான மாட்ரிட்டில் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.

கடந்த மாதத்தில் பாரீஸ் நகரில்'  ஈபிள் டவர் ' போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு கார்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

அதே போல் மிலனில், கார்களை வீட்டில் விட்டு விட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகளில் செல்பவர்களுக்கு  அரசே இலவச டிக்கெட்டுகள் மற்றும் கூப்பன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ