Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாலத்தீவு அதிபரை கொல்ல முயன்றதாக துணை அதிபர் கைது!

டகை வெடிக்க வைத்து மாலத்தீவு அதிபரை கொல்ல முயன்றதாக துணை அதிபர் அகமது அக்தீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி,  மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல்லா கயூம்,  சவுதியில் ஹஜ் பயணம் முடித்துக்கொண்டு தாய் நாடு திரும்பினார். உடன் அவரின் மனைவி பாத்திமா இப்ராஹிமும்  இருந்தார்.  விமான நிலையத்தில் இருந்து அதிபருக்கு சொந்தமான படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவரது படகு அருகே மற்றொரு படகு வெடித்து சிதறியது. ஆனால், இந்தச் சம்பவத்தில் அதிபர்  யாமீன் அப்துல்லா எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரின்  மனைவியும் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரும் இலேசாக காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார்  நடத்திய விசாரணையில், மாலத்தீவு துணை அதிபர் அகமது அக்தீப்புக்கு இச்சம்பவத்தில்  தொடர்பிருப்பதாக தெரிய வந்தது.

இதனையடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு தலைநகர் மாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை,  போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் அங்குள்ள தீவு ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ