Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார் கருணா!

கொழும்பு: இலங்கை முன்னாள் இணையமைச்சரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவருமான கருணா, இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த கருணா, அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் எழுந்த கருத்து மோதலைத் தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறி அரசியலில் நுழைந்தார். இலங்கையின் அப்போதைய அதிபர் ராஜபக்சே ஆட்சியில் கருணாவுக்கு இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக சிறீசேனா பொறுப்பேற்ற பிறகு கருணா ஓரங்கட்டப்பட்டு இருந்தார். மேலும், இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கருணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர், கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் அங்கம் வகித்த சிறீசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து நேற்று விலகி, அனந்தசங்கரி தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சியில் கருணா தன்னை இணைத்துக் கொண்டார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close