Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

காபூல்: பாகிஸ்தானில் நில நடுக்கத்தால் 200 பேர்  உயிரிழந்துள்ளனர். அதே போல ஆப்கானிஸ்தானிலும் 50 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலின் வடகிழக்கே ஜர்ம் பகுதியில் 213 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாயந்த நில நடுக்கம் ஏற்பட்டது.இது  ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இருக்கும் பாகிஸ்தானின் கெபெர் பாக்துன்வா, பெஷாவர், கில்ஜிட் பலிடிஸ்த்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.

நிலநடுக்கத்தால் இந்தப் பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 200 பேர் உயிரிழந்தனர். 1,300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால், மலகண்ட் பகுதி கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஷீல் ஷெரிப் ஆய்வு மேற்கொண்டார்.
 
மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் குனார் பகுதியில் 50 பேர் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ