Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் முன்மாதிரி விவசாயத்தில் கலக்கும் இந்திய பெண்ணுக்கு விருது!

ஹூஸ்டன்: அமெரிக்காவில் இயற்கை விவசாயம் செய்துவரும் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு வெள்ளை மாளிகை, விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் சமூக சேவை புரிந்து வந்தவர் அனிதா அடல்ஜா. இந்திய வம்சாவளி பெண்மணியான இவர், விவசாயத்திலும் ஈடுபட்டார். இதற்காக 'ஆர்காடியா மையம்'  என்ற பெயரில் உணவு மற்றும் வேளாண்மை  நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நவீன முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அனிதா அடல்ஜா, மண்வளம் மற்றும் நீர்வள மேம்பாடு, பசுமைக்கூட வாயு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரி பணிகளை மேற்கொண்டார். இதனால் ‘மாற்றத்துக்கான சாதனையாளர்’ என்ற உயரிய விருதுக்கு, வெள்ளை மாளிகை இவரை தேர்ந்தெடுத்தது.

அத்துடன் விவசாயத்தில் சாதனை புரிந்த மேலும் 11 பேர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்கான விருது நேற்று இரவு வழங்கப்பட்டது. விருது பெற்ற அனிதா அடல்ஜா, அமெரிக்காவின் வேறு சில இடங்களிலும்  முன்மாதிரி வேளாண்மைப் பணிகளை மேற்கொண்டிருப்பதும்,  அவற்றின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close