Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இயலாது: இலங்கை அரசு அறிவிப்பு!

கொழும்பு: இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இயலாது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 12-ம் தேதி முதல் சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தவர்களில் 12 பேரின் உடல்நிலை மோசமடைந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் 16 பேரும், அதிபர் சிறிசேனாவை சந்தித்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கைதிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன், நீதித்துறை அமைச்சர் விஜியதாச ராஜபக்சேவையும், அதிபர் சிறிசேனாவையும் சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் கூறுகையில், ''தமிழ் கைதிகள் அனைவரையும், குற்றச்சாட்டுகள் இன்றி வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், வழக்கு விசாரணை நடைபெறுபவர்கள் மற்றும் விசாரணை முடிந்து தண்டனை அனுபவிப்பவர்கள் என 3 விதமாக தரம் பிரிக்கப்பட்டு, இந்த மாத இறுதியில் தொடங்கி வருகிற நவம்பர் முதல் வாரத்திற்குள் அதிபரின் பொதுமன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்படுவார்கள். எனவே, கைதிகள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்'' எனக் கூறினார்.

இதையடுத்து, இந்த உத்தரவாதத்தை அதிபர் நேரடியாக அறிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, கைதிகள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து தேசிய பேச்சுவார்த்தை குழு அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில், ''இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நேற்று நடந்தது. அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது சாத்தியமில்லை என பிரதமர் தெரிவித்து விட்டார்.

இருப்பினும், காவல்துறை சார்ந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறைகளில் உள்ள கைதிகளை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான நடைமுறைகளை விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ