Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் 12 இடங்கள் முன்னேற்றம்!

வாஷிங்டன்: உலகவங்கியின் எளிமையான வணிகம் கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது..

உலக வங்கி, வணிகம் 2016க்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. உலக அளவில் தலை சிறந்த 22 பொருளாதார வல்லுநர்கள், சுமார் 1000 நாட்களுக்கும் மேலாக ஆய்வு செய்து இந்த தரவரிசை பட்டியலை தயார் செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அந்த அறிக்கையின்படி சிங்கப்பூர் முதல் இடத்திலும் அதை தொடர்ந்து நியூசிலாந்து, டென்மார்க், தென்கொரியா, ஹாங்காங், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் டாப் 10 வரிசையில் இடம்பெற்றுள்ளன. சீனா 84வது இடத்திலும் பாகிஸ்தான் 138வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டும் 10 இடங்களுக்கு பின் தங்கியுள்ளது.

கடந்த ஆண்டுவிட தொழில்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் சிலவற்றை இந்தியா மேற்கொண்டுள்ளதால் உலக அளவில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 130 இடத்தை எட்டி உள்ளது. டெல்லி மும்பை போன்ற நகரங்களில் இருந்தகட்டுமான அனுமதி கிடைப்பதில் தாமதம், மின்சார வசதி, சொத்து பதிவு, சிறுபான்மையின முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, வரி செலுத்தும் முறை, எல்லை தாண்டிய வர்த்தம் உள்ளிட்ட பல பிரச்னைகள் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா 142வது இடத்தில் இருந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளப்பறிய சாதனையாகவே கருதப்படுகிறது. இந்தியா சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறி. இனி வரும் காலங்களிலும் இந்தியா தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னேறும் எனவும் உலக வங்கியின் தலைமை பொருளாதார ஆய்வாளரும், துணை தலைவருமான கவுசிக் பாசு தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ