Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவை பார்த்து பயப்படவில்லை: இலங்கை அமைச்சர் சொல்கிறார்

கொழும்பு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து நாங்கள் பயப்படவில்லை என்று கூறிய இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர, எங்கள் நாட்டு கடல் எல்லையை தாண்டும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றார்.
 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து  கைது செய்யப்படுவார்கள்.

அத்துடன் எல்லை மீறி வந்து மீன்பிடித்தால் இந்திய மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.

ஜெனிவா யோசனை மூலம் முன்னாள் அதிபர் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே உட்பட முப்படையினரும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ