Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகை உலுக்கிய வியட்நாம் போரில் காயமடைந்த சிறுமிக்கு இப்போது சிகிச்சை! (வீடியோ)

1972-ம் ஆண்டு வியட்நாமில் உள்நாட்டுப் போர் நடந்தபொழுது தெற்கு வியட்நாம் வீசிய பெட்ரோலிய குண்டு (நாப்பம்) வெடித்து, கிம் ப்ஹுக் என்ற சிறுமியின் உடையில் நெருப்பு பற்றிக் கொள்ள, தனது உடைகளை எல்லாம் கழற்றி விட்டு நிர்வாணமாக சில சிறுவர்களுடன், ராணுவ வீரர்கள் மற்றும் குண்டுபுகையின் பின்னணியோடு அலறியபடி ஓடிவந்த எட்டு வயதே நிரம்பிய அந்த சிறுமியை புகைப்படமெடுத்தார் நிக்வுட்.

அவர் எடுத்த அந்த புகைப்படம், 19 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தப் புகைப்படத்தை எடுத்த நிக்வுட்க்கு புகைப்படத்துறையின் உயரிய விருதான புலிட்சர் விருதும் கிடைத்தது.

ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக அந்த விபத்தின் போது ஏற்பட்ட தழும்புகளையும், வலியையும் போக்க முறையான சிகிச்சை கிடைக்காத நிலையில், தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகர மருத்துவர் ஜில் வாய்பெல்,  கிம் ப்ஹுக்குக்கு இலவசமாக லேசர் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் ஜில் வாய்பெல் கூறுகையில்,"பெட்ரோலிய குண்டு தாக்கத்தினால் பொதுவான அளவுள்ள தோலைக்காட்டிலும் இவரது தோல் நான்கு மடங்கு பெரிதாக இருக்கிறது. இவருக்கு இருக்கும் பாதி வலி இருந்திருந்தால் கூட யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள்" என்கிறார்.

இவருக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ பதிவைக் காண...


- ந.ஆஷிகா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ