Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தேர்தலில் பாகிஸ்தான் தோல்வி!

நியூயார்க்: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தேர்தலில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து உள்ளது.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், பாகிஸ்தானின் உறுப்பினர் பதவி வருகின்ற டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, மனித உரிமைகள் கவுன்சில் தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலமாக ஐ.நா. பொதுச் சபை கடந்த புதன்கிழமை நடத்தியது. அதில், ஐ.நா. பொதுச் சபையில் உள்ள 193 உறுப்பினர்களில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக 105 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். இதனால், இந்தத் தேர்தலில் பாகிஸ்தான் தோல்வியடைந்து உள்ளது.

மேலும் இந்தத் தேர்தலில், பெல்ஜியம், புரூண்டி, கோட்டே டி இவோர், ஈக்குவடார், எத்தியோப்பியா, ஜார்ஜியா, ஜெர்மனி, கென்யா, பனாமா, கிர்கிஸ்தான், மங்கோலியா, பிலிப்பின்ஸ், கொரிய குடியரசு, டோகோ, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய 18 நாடுகள் வெற்றி பெற்று உள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ