Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர்கள் தீபாவளிக்கு முன் விடுவிக்கப்படுவார்கள்: இலங்கை அமைச்சர்!

கொழும்பு: இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் தீபாவளிக்கு முன் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள், தீபாவளிக்கு முன்னர் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும், சட்டவிரோத படகுகளுக்கு எதிராக இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சட்டத்திற்கு இந்திய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, ''தமிழக மீனவர்களின் ஊடுருவலால் இலங்கையின் வடக்குப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் இழுவைப்படகைப் பயன்படுத்த அனுமதியில்லை.

மேலும், தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட பின் அனைவரும் தீபாவளிக்கு முன் விடுவிக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ