Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்ல நாய் விபத்தில் பலியான அதே இடத்தில் உரிமையாளரும் பலியான பரிதாபம்!

நியூயார்க்: செல்ல நாய் விபத்தில் பலியான அதே இடத்தில் உரிமையாளரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் ஸ்ட்ரசெல் (வயது 55). இவர், எல்லி என்ற நாயை தனது செல்லப்பிள்ளை போல்,  பாசமாக கடந்த 7 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், ராபர்ட்டின் செல்ல நாய் எல்லி,  சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்தில், எல்லியின் உடல் சாலையில் கூழாக சிதைந்தும் போனது.

தனது மனைவி மற்றும் ஒரே மகளுடன் வசித்துவந்த ராபர்ட், எல்லியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார். தனது சோகத்தை மனைவி டெபோராவிடம் மிகுந்த வருத்தத்துடன் கூறி புலம்பியும் வந்துள்ளார் ராபர்ட்.

இந்நிலையில், தனது செல்ல நாய் எல்லி உயிரிழந்த சில மணி நேரங்களுக்குப் பின் அந்த சாலைப்பகுதிக்கு மீண்டும் சென்ற ராபர்ட், எல்லியின் உடல் சிதைவுகளை சாலையிலிருந்து நீக்க முற்பட்டிருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோதியதில் ராபர்ட்டும் தனது செல்ல நாய் எல்லி உயிரிழந்த அதே இடத்தில் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

இந்த சம்பவம், அப்பகுதியில் வசிப்பவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close