Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரவு விடுதி தீ விபத்தில் 27 பேர் பலி; 180 பேர் படு காயம்!

புக்கரெஸ்ட்: ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விடுதியில் நேற்று நள்ளிரவு வாணவேடிக்கையுடன் ராக் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக  நடைபெற்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக விடுதியின் கூரையில் தீப்பிடித்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கூரை மற்றும் ஒரு பில்லர் மளமளவென பற்றி எரிந்ததால்,  அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இதனால் அச்சம் அடைந்த மக்கள், அலறியடித்துக்கொண்டு விடுதியை விட்டு வெளியே ஓடினர்.

மக்கள் வெளியேறுவதற்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். மேலும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஓடியதிலும் பலர் படு காயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 180  பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு புக்கரெஸ்ட்டில் உள்ள 10 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ருமேனியா  துணை பிரதமர் காப்ரியேல் ஓப்ரியா, தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் அந்நாட்டு சுகாதார அமைச்சர்,  தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு ஏராளமான யூனிட் ரத்தம் தேவைப்படுவதால், பொதுமக்கள் ரத்த தானம் வழங்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close