Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாவூத் இப்ராஹிம் இருப்பிடம் எது? சோட்டா ராஜன் வெளியிட்ட தகவல்!

பாலி: மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக  தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்,  பாகிஸ்தானின் பாதுகாப்பில் இருப்பதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், கடந்த மாதம் 25-ம் தேதி பாலிதீவில் கைது செய்யப்பட்டார். தற்போது இந்தோனேசியா போலீசாரின் தீவிர பாதுகாப்பில் உள்ள அவரை, இந்தியா அழைத்து வர கடந்த சனிக்கிழமை மாலை சி.பி.ஐ. குழு இந்தோனேசியா பயணமானது.

அவர்களுடன் டெல்லி மற்றும் மும்பை போலீசாரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேஷியாவின் பாலிதீவில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சோட்டா ராஜன், “ மும்பை தொடர் குண்டு வெடிப்பு உட்பட பல குற்ற வழக்குகளில் தேடப்படும் நபரான தாவூத் இப்ராஹிம்,  பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில்தான்  உள்ளார்” என்று கூறியுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ