Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லஷ்கர் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பை ஆதரித்து செய்தி வெளியிட தடை!

இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட 3 தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடக் கூடாது என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுக்கும், வானொலிகளுக்கும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பண்பலை வானொலி நிறுவனங்களுக்கும் பாகிஸ்தான் மின் ஊடக ஒழுங்குமுறை அமைப்பு நேற்று ஒரு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

அதில், லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா உள்பட 3 தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடக் கூடாது என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுக்கும், வானொலிகளுக்கும் அந்நாட்டு அரசு நேற்று அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

மேலும், சமூகத் தொண்டு என்ற பெயரில் அந்த தீவிரவாத அமைப்புகள் நிதி திரட்டுவதற்காக வழங்கும் விளம்பரங்களையும் வெளியிடக் கூடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவுகளை மீறினால் ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close