Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாவூத்துக்கு ஆதரவாக மும்பை போலீஸ்: குற்றஞ்சாட்டும் சோட்டா ராஜன்!

பாலி: இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம்க்கு சாதகமாக சில மும்பை போலீஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்று சோட்டா ராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் கைது செய்யப்பட்டு, அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதாவான சோட்டா ராஜன்,  செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மும்பை போலீஸார் எனக்கு எதிரான ஏராளமான அட்டூழியங்களை செய்துள்ளனர். நான் அவர்களை நம்பவில்லை. அவர்கள் தாவூத் இப்ராஹிமுக்கு ஆதரவாக வேலை செய்கிறார்கள்.

டெல்லி அரசு இதை மனதில் வைத்துக் கொண்டு எனக்கு நீதி வழங்க வேண்டும். நான் தாவூத்துக்கு பயப்படவில்லை. நான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்