Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு!

டாஸ்ல்டோர்ப்: ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ல் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று,  ஜெர்மனியின் டாஸ்ல்டோர்ப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அதேபோல் கடந்த 2011-ம் ஆண்டும் ஜெர்மனியின் கோப்லென்ஸ் பகுதியில், ஒரு வெடிக்கப்படாத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதை பாதிப்பில்லாமல் வெடிக்க செய்ய, கிட்டத்தட்ட 45,000 பேர் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த குண்டுகள், ஜெர்மனியில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

மேலும், ஜெர்மனியின் பெரும்பாலான பகுதியில் இது போல உலகப் போரில் பயன்படுத்தப்படாத வெடிகுண்டுகள் புதையுண்டு காணப்படுவதால் இதற்கென தனிப்படைகள் கொண்டு அவ்வாறான குண்டுகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தும் வேலைகள் ஆங்காங்கே நடக்கின்றன.

இந்நிலையில், நேற்று (2-ம் தேதி) ஜெர்மனி நாட்டின் டாஸ்ல்டோர்ப் நகர விமான நிலையத்தில் 125 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குண்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு வெடிக்க வைக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. விமான நிலையத்தின் கட்டுமான வேலைகளின்போது, பூமியில் கண்டறியப்பட்ட இந்த வெடிகுண்டும் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்கப்படாத குண்டு என தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாக ஜெர்மனியில் முப்பதிற்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கபட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 70 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், அதன் தாக்கம் ஏதோ ஒரு வழியில் இன்றும் உணரப்படுவது, போர்களினால் உண்டாகும் அழிவு முடிவற்றது என்னும் கருத்தை வலுவாக்கிறது.

-கோ. இராகவிஜயா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ