Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலனுடன் சென்ற பெண் கல்லால் அடித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்

காபூல்: காதலனுடன் சென்ற பெண்ணைக் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆப்கானிஸ்தான்  பெரோஸ்கோவிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கல்மீன் என்ற இடத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் ரோக்சஹானா. 21 வயதான இந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண், தனக்கு விருப்பமானவருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் அந்தப் பெண் மீது அதே ஊரைச் சேர்ந்த  ஆண்கள் பலரும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி  கொலை செய்தனர். அந்தப் பெண் வேதனை தாளாமல் கதறியதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அத்தோடு இந்தக் கொடூர காட்சியை 30 வினாடிகள் ஓடக்கூடிய வகையில் விடியோவாக எடுத்து இணையதளத்திலும் சிலர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கோர் மாகாண போலீஸ் தலைவர் முஸ்தபா மோசேனி கருத்து தெரிவிக்கையில், “சம்பவம் நடந்த பகுதி தலிபான்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதி. இந்த ஆண்டு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை” என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ