Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் எரிமலை சீற்றம்: சோட்டாராஜனை இந்தியா அழைத்து வருவதில் தாமதம்!

பாலி: இந்தோனேசியா பாலி தீவில் ஏற்பட்டுள்ள எரிமலை சீற்றம் காரணமாக, விமான நிலையம் நாளை வரை மூடப்பட்டுள்ளதால், சோட்டா ராஜனை  இந்தியா  அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாலியில் இருந்து சோட்டா ராஜனை சிறப்பு விமானம் மூலம் நேற்று (புதன் கிழமை) அழைத்துவர, சி.பி.ஐ. குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், விமான நிலையத்தின் அருகே மலைப் பகுதியில் எரிமலை கொப்பளித்து  வருவதால், விமான நிலையம் இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டது.

இதனால்  இன்றும்(வியாழன்) அவர் இந்தியாவிற்கு அழைத்து வரப்படமாட்டார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையின் சீற்றம் குறைந்தால் மட்டுமே சோட்டா ராஜனை இந்தியா கொண்டுவர முடியும் என்பதால், அவருக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும் புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ