Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாம்பை கடித்துக் கொன்ற ஒன்றரை வயது குழந்தை! (வீடியோ)

வீட்டிற்குள் புகுந்த பாம்பை, ஒன்றரை வயது குழந்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.
 

பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரைச் சேர்ந்த ஜெயின் பெரேரிய- லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ. இவன் வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் விளையாடிக் கொண்ட இருந்திருக்கிறான். அந்த சமயத்தில் குழந்தைக்கு பால் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற தாயாருக்கு, குழந்தையிடம் இருந்து சத்தம் எதுவும் வராததால் சந்தேகமடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார்.

அப்போது குழந்தையின் கையில் ரத்தம் இருந்ததை கண்டு தாயார் அதிர்ச்சியடைந்ததோடு, அவனுக்கு அருகில்  பாம்பு ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்து பதறியுள்ளார். உடனடியாக பாம்பை ஒரு பாட்டிலில் எடுத்துக்கொண்டு மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உங்களது மகன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தை, அந்த பாம்பை விளையாட்டுப் பொருளாகவோ, பொம்மையாகவோ எண்ணி கடித்திருக்கக் கூடும் என்றும், குழந்தை கடித்தது பாம்பின் கழுத்துப் பகுதி என்பதால், பாம்பு குழந்தையின் பிடியிலிருந்து விலகமுடியாமல் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்தனர்.

குழந்தை கடித்துக் கொன்ற பாம்பு  விஷமற்ற பாம்பு என்று கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close