Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தவறி விழுந்த மாணவன்: 16 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்திய பள்ளி நிர்வாகம்!

ள்ளியில் திறந்திருந்த ஜன்னல் வழியே மாணவன் தவறி விழுந்த வழக்கில், பள்ளி நிர்வாகத்துக்கு 16 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

இங்கிலாந்தில் பிர்மின்காம் பகுதியில் அமைந்துள்ள முன்ஞ்கின்ஸ் சிறுவர் பள்ளியில்,  திறந்திருந்த முதல் மாடி ஜன்னல் வழியே 2 வயதுடைய பில்லி கோனிப்ஸ் என்ற சிறுவன் தவறி விழுந்தான். இதில் அதிர்ஷ்டவசமாக மாணவன் சிறுகாயத்துடன் உயிர் தப்பினான்.

இதையடுத்து, பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், மாணவன் இருந்த அறையில் காற்றோட்ட வசதிக்காக 4 ஜன்னல்கள் இருந்தும் அவை அனைத்திலுமே போதிய பாதுகாப்பு அமைப்புகளை பள்ளி நிர்வாகம் செய்யவில்லை" என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமது கடமையில் இருந்து தவறியதை பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்துக்கு 2 லட்சத்து 48 ஆயிரத்து 667 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், நீதிமன்ற செலவினங்களுக்காக 13 லட்சத்துக்கு 92 ஆயிரத்து 536 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close