Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஷ்ய விமான விபத்திற்கு காரணம் குண்டுவெடிப்பு: கருப்பு பெட்டி ஆய்வில் பரபரப்பு தகவல்!

மாஸ்கோ: அண்மையில் நடந்த ரஷ்ய விமான விபத்திற்குக் காரணம் குண்டுவெடிப்பே என்று கருப்பு பெட்டி ஆய்வில் தெரிய வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எகிப்திலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கி, அதிலிருந்த  224 பேரும் மொத்தமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்த ரஷ்ய விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், குண்டு வெடிப்பால்தான் அந்த விமானம் சிதறி விழுந்துள்ளது என்று கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரத்து செய்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது.

அந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. இதனிடையே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். அமைப்பினர் அறிவித்தனர். ஆனால் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தை ஐ.எஸ். அமைப்பால் சுட்டு வீழ்த்தியிருக்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது.

இதைத் தொடர்ந்து விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டு ரஷ்ய மற்றும் பிரான்ஸ் நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். இதில் ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை, வெடிகுண்டு வெடித்ததால்தான் விமானம் சிதறி விழுந்துள்ளது என்று ஆய்வு செய்த நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக ரஷ்ய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. எனினும் ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று திடீரென ரத்து செய்துள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close