Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாராள குணம் 'குட்டி' மியான்மருக்கு முதலிடம்: தெற்காசியாவில் இந்தியா கடைசி இடம்!

டுத்தவர்களுக்கு தாராளமாக அள்ளிக் கொடுக்கும் குணம் நிறைந்த மக்கள் நிறைந்த நாடாக குட்டி நாடான மியான்மர் (பர்மா)திகழ்வதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 106வது இடம் கிடைத்துள்ளது.

‘தி சேரிட்டி ஏய்ட் பவுண்டேஷன்’ (சிஏஎப்), என்ற அமைப்பு 145 நாடுகளில் ஆய்வு செய்து தாராள மனப்பான்மை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் வியப்பளிக்கும்விதமாக இந்தியாவின் அருகில் உள்ள மியான்மர் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.  பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த பட்டியலில் இந்தியாவுக்குதான் கடைசி இடம். இந்தியாவில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மக்கள் குறைந்து கொண்டே வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில்,இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிடுபவர்களும் முன்பின் தெரியாதவர்களுக்கும் நேரத்தை செலவிடுபவர்களும் அதிகமாக உள்ளதாக இந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

கொடுக்கும் குணம் நிறைந்த மக்கள் நிறைந்த நாடுகளில் அமெரிக்கா 2வது இடத்தை பிடிக்கிறது. நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. தொடர்ந்து இங்கிலாந்து 6வது இடத்திலும் நெதர்லாந்து 7வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை இந்த பட்டியலில் 8வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 9வது இடத்தை அயர்லாந்தும் 10வது இடத்தை மலேசியாவும் பெற்றுள்ளன.

பொதுவாக பெண்களை விட ஆண்கள் தாராள குணம் நிறைந்தவர்களாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.



 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close