Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆப்பிள் ஸ்டோரில் கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு ( வீடியோ)

மெல்பர்ன் நகரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கிளையில் கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இணையங்களில் வைரலாகியதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது
                              

மெல்பர்னில் உள்ள பள்ளியில் படித்து வரும் 6 ஆப்ரிக்க மாணவர்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான கிளை ஒன்றுக்கு  பள்ளி சீருடையிலேயே  சென்றுள்ளனர். ஆனால் வாயிலிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். உடனே அங்கு வரும் ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் ''உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூற, அதற்கு அந்த மாணவர்கள் 'ஏன் நாங்கள் எதையாவது திருடிவிடுவோமா? என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் கடை ஊழியரோ... 'வீண் வாக்குவாதங்களை விட்டு விட்டு உடனடியாக இங்கிருந்து வெளியே செல்லுங்கள் ' என்று அவர்களுக்கு உத்தரவிடுகிறார். இந்த சம்பவத்தை அந்த மாணவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து 'சிம்பிள் ரேஸிசம்' என வெளியிட்டார். இந்த வீடியோ இணையங்களில் 60 ஆயிரம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டது. மேலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் கண்டமும் எதிர்ப்பும் எழுந்தது.

     

கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட ஆப்பிள் ஸ்டோரின் மேலாளரே, அந்த மாணவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மன்னிப்பு கேட்டார். அதோடு பள்ளி முதல்வர் நிக் ஸ்காட்டிடமும்  தங்கள் ஊழியர்களின் செய்கைக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து பள்ளி முதல்வர் நிக் ஸ்காட் கூறுகையில், ''எங்கள் பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையில் இது போன்று நடத்தப்பட்டது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது'' என்றார்.

 ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், ஆப்பிள் வெப் சைட்டில்,''  எங்களுடன் இணைந்து செயல்பட விரும்பும் ஒவ்வொருவரையும் வரவேற்கிறோம். எங்கள் ஸ்டோருக்கு வரும் ஒவ்வொரு நுகர்வோரையும், வரும் அழைப்புகளையும் இன்முகத்துடன் வரவேற்கிறோம். இங்கே  இனம், மொழி, நிறம், பாலியல் பாகுபாடு என எந்த வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரியாது '' என இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 





 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close