Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரிஸ் தாக்குதல்: இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்- தூதரக அதிகாரி தகவல்

பாரிஸ்: பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பிரான்ஸூக்கான இந்திய  தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுத்தடுத்து 7 இடங்களில் தீவிரவாதிகள் நேற்றிரவு தாக்குதல் நடத்தினர். கால்பந்து மைதானம், இசை கச்சேரி நடைபெற்ற அரங்கு என முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பட்சலன் இசை கச்சேரி ஹாலில் இருந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவன் போலீசால் சுட்டுகொல்லப்பட்டதாகவும், ஏனைய 3 பேரும் தற்கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் உயிரிழந்ததாகவும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய விளையாட்டு அரங்கம் அருகே 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு தீவிரவாதி கிழக்கு பாரிஸ் தெருவில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பிரான்ஸூக்கான இந்தியத் தூதரக அதிகாரி மணிஷ் பிரபாத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close