Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரிஸ் தாக்குதல்: உலகத் தலைவர்கள் சொல்வது என்ன?

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலகத் தலைவர்கள்,  இது மனிதாபிமானத்துக்கு எதிரான தாக்குதல் என்றும், நீதிக்கு புறப்பானது என்றும் கூறியுள்ளனர்.

பாரிஸில் தீவிரவாதிகள் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 158 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், "இது மனிதத்தன்மையற்ற செயல். அப்பாவி மக்கள் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள். இது மனிதாபிமானத்துக்கு எதிரான தாக்குதல். நீதிக்கு புறப்பானது" என்றார்.

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில், 'பாரிஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் மன வேதனையும் பேரதிர்ச்சியும் அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்காக நாம் பிரார்த்திப்போம். இந்த இக்கட்டான நிலையில் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆறுதலாக நாம் இணைந்து இருப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்த சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும். பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கிமூன் வெளியிட்டுள்ள செய்தியில், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். பட்லாகா தியேட்டரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள செய்தியில்  "பிரான்ஸூற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் ஹோலேண்டே கூறுகையில், "இது மனிதநேய மற்ற செயல். ஒற்றுமையாக இருந்து இந்த தாக்குதலை முறியடிப்போம். எவ்வித கருணையும் இன்றி இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராக போராடுவோம்" என தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ