Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம்: பிரான்ஸ் அதிபர் தகவல்

பாரிஸ்: பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று பிரான்ஸ் அதிபர் ஹோலேண்டே குற்றம்சாட்டியுள்ளார்.

பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதலில் 127 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பே காரணம்.

இந்த கொடூர தாக்குதல் வெளிநாட்டில் திட்டமிடப்பட்டு உள்நாட்டு உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாரிஸில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரிஸில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close