Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க மருத்துவமனை சாதனை: இப்படி இருந்தவர் இப்படி ஆனார்!

மெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர் பேட்ரிக் ஹார்டிசன். தற்போது இவருக்கு 41 வயதாகிறது. அமெரிக்க தீயணைப்புத் துறையில் தன்னார்வத் தொண்டராக  பணியாற்றுவது
ஹார்டிசனின் வழக்கம்.

அந்த வகையில்  கடந்த 2001-ம் ஆண்டு மிசிசிபியில் உள்ள செந்தோபியா பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஹார்டிசன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரும் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹார்டிசன் , தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். ஆனால் அந்த தீ விபத்து ஹார்டிசனின் வாழ்க்கையே புரட்டி  போட்டு விட்டது. தீயால் அவரது முகம் வெந்து போனது. காது, உதடு, இமைகள் என எதுவுமே அவரது முகத்தில் இல்லை. இதனால்,  அவரால் கண்களை மூடி கூட உறங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. கடந்த 14 வருடங்களாக ஹார்டிசன் அனுபவித்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்நிலையில் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்று விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த டேவிட் ரோட்பக்கின் என்பவரது உடல் உறுப்புகளை ஹார்டிசனுக்கு வழங்க, அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து டேவிட் ரோட்பக்கின் முகத்தில் இருந்து அனைத்து பாகங்களும் எடுக்கப்பட்டு ஹார்டிசனுக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

நியூயார்க்  பல்கலையில் உள்ள லோங்கன்  மெடிக்கல் சென்டரில் ஹார்டிசனுக்கு முக மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்தது. சுமார் 26 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், 150 பேர் கொண்ட மிகப் பெரிய மருத்துவக்குழுவே பங்கேற்றது.

முதலில் டேவிட் ரோட்பர்க்கின் முகத்தில் இருந்து காது, உதடு, முக்கு, கண் இமை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் எடுக்கப்பட்டு,  ஹார்டிசன் முகத்தில் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின், 3 மாதங்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்தான் ஹார்டிசன் இருந்தார். நாளாக நாளாக ஹார்டிசன், முகம் கொஞ்சம் கொஞ்சமாக சாதாரணமாக மாறத் தொடங்கியது.

தற்போது முழுதாக அவரது முகம் பொலிவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்தே அந்த மருத்துவமனை நேற்று ஹார்டிசனை செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. ஹார்டிசனின் முகத்தில் ஒவ்வொரு முறையும் அடைந்த முன்னேற்றங்களையும் புகைப்படங்களாக எடுத்து அந்த  மருந்துவமனை வெளியிட்டுள்ளது.

இந்த முகமாற்று அறுவை சிகிச்சைக்கு, சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது. உலகிலேயே மிகவும் அதிக செலவு கொண்ட முகமாற்று அறுவை சிகிச்சை இதுதான்.

தற்போது புதுமுகத்தை கொண்டுள்ள, ஹார்டிசன் கூறுகையில், '' அந்த தீ விபத்துக்கு பின் எனது முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு எனது குழந்தைகள் கூட என்னிடம் நெருங்க பயந்தனர். எனது எதிரிக்கு கூட இந்த வேதனை வரக் கூடாது.  14 வருடங்களாக உறக்கமில்லாமல் தவித்தேன். இனிமேல் நிம்மதியாக உறங்கப் போகிறேன்'' என்கிறார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ