Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி!'

மாஸ்கோ: உலகில் உள்ள நாடுகளில் 40 நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஞாயிறன்று பாரீஸ் நகரில்  நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத்  தொடர்ந்து, அவர்களை அழித்துவிட  உலக நாடுகள் தீவிரமாகியுள்ளன. இதனையடுத்து ஃபிரான்ஸ் நாட்டு வான்படை,  சிரியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு பண உதவி செய்து வருவதாக  ரஷ்ய அதிபர் புதின்  குற்றம் சாட்டியுள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது.

 “எங்களுடைய தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை வெளிப்படுத்துகின்றேன். ஐ.எஸ். தொடர்பான வெவ்வேறு இயக்கங்களுக்கு பண உதவி அளிக்கப்படுகிறது. பண உதவி எங்கிருந்து கிடைக்கப்பெறுகிறது என்பதையும் கண்டு பிடித்து உள்ளோம். ஜி-20 அமைப்பில் இடம்பெற்று உள்ள 3 நாடுகள் உள்பட உலகம் முழுவதும் 40 நாடுகளில் இருந்து பண உதவி அளிக்கப்படுகிறது” என்று புதின் கூறியுள்ளதாக ரஷ்யா டைம்ஸ் உள்ளிட்ட அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. 

பாரீஸ் தாக்குதலை அடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவதில் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக் கொண்டு உள்ளது.

“உலக அளவில் தீவிரவாத தாக்குதலை தடுக்கவும், தீவிரவாதத்தை எதிர் கொள்ளவும் குறிப்பிடத்தக்க அளவில் நடவடிக்கை எடுக்கும் தேவை நமக்கு ஏற்பட்டு உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக நாங்கள் அறிவித்து உள்ளோம். துரதிஷ்டவசமாக, எங்களுடைய அமெரிக்க கூட்டாளிகள் மறுத்துவிட்டனர்" என்றும் புதின் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ