Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமானத்தை அழித்தவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம்: ரஷ்ய அதிபர் ஆவேசம்!

மாஸ்கோ: ரஷ்ய விமானத்தைத் தாக்கி அழித்த தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். 

எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31-ம் தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் உடனே அறிவிக்கவும் செய்தனர். இதனை தொடக்கத்தில் மறுத்த ரஷ்ய அரசு தற்போது,  விமானத்தை தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மூலம் வெடித்து சிதற வைத்துள்ளனர். இதற்கு பயங்கரவாத தாக்குதலே காரணம் என  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், “இது போன்ற தீவிரவாத தாக்குதலை சந்திப்பது ரஷ்யாவிற்கு ஒன்றும் புதிதில்லை. விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகளைத் தேடி கண்டுபிடிப்போம்.  அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்துத் தண்டிப்போம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close