Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனிதர்கள் சித்ரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் சுவர்களில் உள்ளன: ஐ.நா. குழு அதிர்ச்சி தகவல்

கொழும்பு: "இலங்கை கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்டவிரோதமாக ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை கண்டுபிடித்தோம். அங்கு, சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் சுவர்களில் உள்ளன" என்று ஐ.நா. குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்தபோதும், சண்டைக்குப் பிறகும் இலங்கையில் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் எழுந்தன. இதை விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே-ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது.

இக்குழுவினர், இலங்கைக்கு சென்று அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். தலைநகர் கொழும்பு மட்டுமின்றி கலே, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். மேலும், காணாமல் போன தமிழர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களை சந்தித்தும் பேசினர்.

இந்த குழுவினர் தங்களின் 10 நாள் பயணத்தை நேற்றுடன் முடித்து கொண்டனர். இக்குழு, தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில், தாங்கள் நேரில் கண்டவை குறித்து குழுவில் இடம்பெற்றுள்ள ஏரியல் துலிட்ஸ்கி கூறும்போது, ''எங்கள் பயணத்தின்போது, கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்டவிரோதமாக ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை கண்டுபிடித்தோம்.

சண்டை முடிவடைந்த ஓராண்டுக்கு பிறகும், 2010-ம் ஆண்டுவரை அந்த கூடம் இயங்கி உள்ளது. அங்குள்ள பாதாள அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள், அங்குள்ள சுவர்களில் காணப்படுகின்றன.

இதை கண்டுபிடித்ததை முக்கிய கண்டுபிடிப்பாக கருதுகிறோம். இன்னும் இதுபோல் நிறைய இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால், இந்த கூடம் பற்றி இலங்கை அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close