Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எச்ஐவி தாக்கிய ஹாலிவுட் நடிகரின் புலம்பல்!

டிகர் ஒருவரின் பேட்டி அமெரிக்காவின் என்.பி.சி. சேனலில் வெளியாகி இருக்கிற‌து. அந்த பேட்டியின் மூலம் அவ‌ருக்கு வருங்காலத்தில் மில்லியன் டாலர்களுக்கு மேல் லாபம். எப்படி? பார்ப்போம்...

சமீப நாட்களாக அமெரிக்க பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்ட விஷயத்தை 'முதல் மரியாதை' சிவாஜி கணக்காக‌ அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நடிகர் சார்லி ஷீன், ஒருவழியாக வாயைத் திறந்துவிட்டார். "எல்லாரும் நல்லாக் கேட்டுக்கங்க... ஆமா... எனக்கு எச்ஐவி!” என்பதுதான் பேட்டியில் அவர் உதிர்த்த கருத்து.

விஷயத்தைச் சொல்லி, அதுவரை வயிற்றுக்கும் தொண்டைக்குமாக நெருடிக்கொண்டிருந்த அந்த உருண்டையை துப்பிவிட்டார். பாரம் இறங்கிய நிம்மதி. ஆனால், அவருடன் ’தங்கி’ச் சென்றவர்களுக்கு வயிற்றுக்குள் புளியையும், கிலியையும் கரைத்துவிட்டது. சரி, எச்ஐவி இருப்பதனால் எப்படி அவருக்கு மில்லியன் டாலர் லாபம் கிடைக்கும்? ரெண்டு இட்லி பார்சல் கேட்டால் இலவசமாக கிடைக்கும் கெட்டிச் சட்னியா என்ன‌? விஷயம் அதுவல்ல.

’எச்ஐவி இருக்கிறது’ என சார்லிக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே தெரியும். விஷயத்தை நாசூக்கா கையாளணும், நாலு பேருக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தார் சார்லி. விஷயம் தெரிந்தவர்களுக்கு பணத்தைக் கொடுத்து வாயை அடைத்தார். பணம் வாங்கியவர்கள் சும்மா இருப்பார்களா? திரும்பத் திரும்ப வந்து கியூ கட்டி நின்றனர். "குடுக்குறியா, இல்ல வெளிய சொல்லவா...?" என்று மிரட்டினர். வாரிவாரி வழங்கினார். எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரையில் லாபம் என கறந்து தள்ளினர்.

பணத்தைக் கொடுத்து பிறர் வாயை அடைத்தவர் கையை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்க வேணாம்? மைனர் திரும்பவும் ’அட்வான்ஸ் புக்கிங்’கில் வேலி தாண்டினார். வேலி தாண்டியவர் உஷாராகவாவது இருக்க வேண்டாமா? ஒருமுறை அவருடன் வந்து தங்கிய இரவுப்புறா ஒன்று, ஷீன் எச்ஐவி மருந்து எடுத்துக்கொள்வதை கவனித்துவிட்டது. வேறுவழி? புறாவுக்கு டபுள் பேட்டாவுக்கும் மேல் கொடுத்து சரிக்கட்டி அனுப்பினார்.

ருசி கண்ட அமெரிக்க பூனைகள் சும்மா இருக்குமா? கஜினி மாதிரி திரும்பத் திரும்ப படையெடுத்தார்கள். சார்லிக்கு கொடுத்து மாளவில்லை. ஒருகட்டத்தில் 10 மில்லியன் டாலர்களுக்கும்மேல் அழுதுவிட்டார். இதற்குமேல் தாங்காது, விஷயத்தை பொதுவெளியில் விட்டுவிட வேண்டியதுதான் என முடிவெடுத்தார். சேனலுடன் பேச்சுவார்த்தை நடத்தி டீல் பேசி பேட்டியில் தனக்கு எச்ஐவி இருப்பதை ஒப்புக்கொண்டார்.

விஷயம் அத்தோடு முடியவில்லை. பேட்டி கேட்பவர்கள் சும்மா இருப்பார்களா?  நோண்டி நொங்கெடுத்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் ஷீன் சொன்ன பதில்தான் இது.

"எனக்கு எச்ஐவி இருக்கிறதுன்னு தெரிந்தபிறகும் நான் பலருடன் உடலுறவு கொண்டேன், ஆனால் அவர்களுக்கு முன்கூட்டியே விஷயத்தை சொல்லிவிடுவேன். எல்லாரிடமும் பாதுகாப்பான முறையில்தான் செயல்பட்டேன். ரெண்டே ரெண்டு பேரைத் தவிர்த்து. ஆனாலும், அந்த இரண்டு பேருக்கும் பிறகு எச்ஐவி தாக்கவில்லை என்பதை எனது டாக்டர்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டேன்" என்றார்.

இனிமேல் யாரும் தன்னை மிரட்டி பணம் பறிக்க முடியாது என்று ஷீன் நிம்மதி அடைந்திருக்கிறார்.

கொசுறு தகவல். அமெரிக்காவில் மொத்தம் 12 லட்சம் பேர் எச்ஐவி நோயாளிகள். ஷீன் 10 மில்லியன் டாலர்கள் இழந்திருக்கிறார். மத்த 11 லட்சத்து சொச்சம்பேர் இழந்து கொண்டிருப்பது எவ்வளவோ?

- சீலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close