Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பாரீஸ் தாக்குதல்: அன்பை பரிமாறுகிறவர்களே இறுதியில் ஜெயிக்கிறார்கள்!'

டந்த நவம்பர் 13-ம் தேதி பாரிஸில் நடந்தக் கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு 130க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்து போனார்கள். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ( இரானியன் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா)  இயக்கம், உலகம் முழுதும் இருந்து கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது.

இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு பலியான மக்களுக்காக எங்கும்  நினைவஞ்சலிகள் நடத்தப்படுகின்றன.

இதே போல், கடந்த ஜனவரியில் ஃபிரான்ஸின் சார்லி ஹெப்டோ என்கிற பத்திரிக்கை, இஸ்லாமியர்களின் முகம்மது பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. அதில், அந்தப் பத்திரிக்கையின் 12 ஊழியர்கள் பலி ஆனார்கள்

இந்நிலையில் கடந்தவாரம்  பாரீஸின் படாக்ளான் தியேட்டரில் நடந்த தாக்குதல் குறித்து, சார்லி ஹெப்டோவின் கார்டூனிஸ்ட் ஜோன் சஃபார், தன்னுடைய கருத்தை தன் கார்ட்டூன்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இது உலகெங்கும் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.



இந்த கார்ட்டூன்களில் சார்லி ஹெப்டோ கூறுவது...

  *  ஃபிரான்ஸ் என்னும் பழமை வாய்ந்த நாட்டில் மக்கள் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்வர்.

  *  பல நூற்றாண்டுகளாக போர் விரும்பிகள், ஃபிரான்ஸ் வாழ்கையின் சுவையையே கெடுத்து வருகிறார்கள்.

  *  ஆனால் அவர்கள் எப்போதும் வெற்றி பெறுவதில்லை.

  *  இங்கு வாழ்ந்து, அன்பை பரிமாறுகிறவர்களே இறுதியில் ஜெயிக்கிறார்கள்.

  *  இறந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக பாடிக் கொண்டு, வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இப்போது, போர் அறிவிப்பு வந்துள்ளது என அவர்களுக்குத் தெரியாது.

  *  அலைகளால் அடிக்கப்படுகிறோம். ஆனால் மூழ்கிப்போவதில்லை.

இவை, இந்த சூழ்நிலையின் பாரீஸ் நாட்டு மக்களின் பலதரப் பட்ட மனநிலையோடு, அவர்களின் மன உறுதியையும் காட்டுகிறது.

மேலும் படங்களுக்கு: https://instagram.com/joannsfar/

மு.சித்தார்த்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ