Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொடூரமான தீவிரவாதிகள் பட்டியல்: ஐஎஸ் அமைப்பை முந்தியது போகோ ஹராம்!

ண்மையில் நடந்த பாரிஸ் தாக்குதலையடுத்து உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கருதப்பட்டது. ஆனால் அதை விட பயங்கரமான தீவிரவாத இயக்கமாக உருவெடுத்துள்ளது, ஆப்பிரிக்காவின் போகோ ஹராம் அமைப்பு.

வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம் “உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2015” என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற அமைப்பு ஐ எஸ் இயக்கத்தை விட கொடூரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், " சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 6,073 பேர் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் போகோ ஹராம் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 6,664 பேர்.

நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத சதித்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரு தீவிரவாத இயக்கம், போகோ ஹராம். திடீர் தாக்குதல்களால் எதிர்தரப்பினரை நிலைகுலையச் செய்யும் இவர்களது அட்டூழியங்களை அந்நாட்டு அரசும், ராணுவமும் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. நைஜீரியாவின் ராணுவ பட்ஜெட் 5 பில்லியன் டாலர்களாகும். ஆனாலும் தங்கள் நாட்டுப் பட்டாளத்துப் படைகளை விட அதிநவீன ஆயுதங்களைப் பெற்றுள்ளனர் இந்த தீவிரவாதிகள். இதற்கு அந்நாட்டில் நிலவி வரும் ஊழலே காரணம் என பலதரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவின் ஐஎஸ் பிரிவு என்று தங்களை, ஐஎஸ் உடன் இணைத்தே அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள்,  கடந்த புதன்கிழமை நைஜீரியாவின் ஒரு பகுதியில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நாட்டு பிரதமர் முஹம்மது புகாரி அறிவுறுத்தியுள்ளார்.

மேலை நாடுகளில் பயங்கரவாத தாகுதல்கள் நடைபெறுகின்றன என நாம் மேலோட்டமாக விட்டுவிட முடியாது.

போகோ ஹராம் பிரிவினரை உலகின் கொடூரமானவர்கள் என அறிவித்த அதே அறிக்கை, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 162 நாடுகள் கொண்ட அப்பட்டியலில் இந்தியாவுக்கு 6 -வது இடம். 2014-ம் ஆண்டில்தான் தீவிரவாதத்தால் அதிகமான உயிரிழப்புகளை இந்தியா சந்தித்துள்ளது. இப்பட்டியலில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் 4-வது இடத்தையும், வளர்ந்த நாடான அமெரிக்கா 35-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
-ராகினி ஆத்ம வெண்டி

(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ