Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணத்தைப் பறிக்க வந்த கொள்ளையனுக்கு அடி உதை: வைரலான சீன ஏ.டி.எம். வீடியோ!

பெய்ஜிங்: ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவரிடம் கொள்ளையடிக்க முயன்று தாக்கிய இளைஞருக்கு அடி உதை கொடுத்து, போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  



சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 14 -ம் தேதி ஏ.டி.எம்.மில் புகுந்த ஒரு கொள்ளையன்,  பணம் எடுப்பதற்காக காத்திருந்த ஒருவரைத் தாக்கியுள்ளான். இதில் அதிர்ச்சியடைந்த அவர் அந்த கொள்ளையனுக்கு அடி உதைக் கொடுத்து கீழே விழ வைக்கிறார்.

பின்னர் அவனை போலீசிடம் ஒப்படைக்க காத்திருக்கையில் அந்த கொள்ளையன் தப்பிக்க முயற்சிக்கிறான். (வீடியோவில் இதுவரையிலான காட்சிகள் மட்டுமே பதிவாகி உள்ளது) ஆனால் மீண்டும் இருவரும் ரோட்டில் சண்டையைத் தொடருகின்றனர். போலீஸ் வந்து கைது செய்யும் வரையில், ரோட்டில் சண்டை தொடர்ந்ததாக  உள்ளூர் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close