Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெள்ளை வேன் கடத்தல்: கோத்தபய சொல்லும் அதிர்ச்சி காரணம்!

ராஜபக்சே ஆட்சி காலத்தில், ராணுவ புலனாய்வு பிரிவினரே வெள்ளை வேன்களை பயன்படுத்தி, ஆட்கடத்தலிலும், காணாமல் போக செய்ததிலும் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கோத்தபய அளித்துள்ள பேட்டியில், விடுதலைப்புலிகள், குற்றவாளிகள் மற்றும் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க,  புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய வாகனங்களையே வெள்ளை வாகனம் என்கின்றனர். இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு செயல்படவில்லையா?

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) காலத்தில் கறுப்பு வாகனங்களில் இளைஞர், பெண்கள் கடத்தப்பட்டனர். இதனை அனைவரும் மறந்து விட்டனர். யார் மீதாவது சேறுபூச வேண்டுமாயின் எதையாவது அடிப்படையாகக் கொண்டு கதைகளை புனைவார்கள். எமது சமூகம் அனைத்தும் சிறந்த, நியாயமான சமூகமல்ல. சகல காலங்களிலும் தவறுகள் நடந்துள்ளன" என்று கூறினார்.

மேலும், வெள்ளை வாகனங்களை பயன்படுத்தி ஆட்களை கடத்திச் சென்ற சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோத்தபய, "புலனாய்வுப் பிரிவினரின் செயல்பாடு குறித்துதானே கேட்கிறீர்கள்?. 1988-89ம் ஆண்டுகளில் கறுப்பு வாகனங்களை  பயன்படுத்தியா கடத்தினர். குற்றவாளிகளே வெள்ளை வாகனங்களை பயன்படுத்தி கடத்திச் செல்லப்பட்டனர்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ