Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டிருந்ததை கவனிக்காத மோடி!

மலேசியா: ஆசியன் மாநாட்டில், ஜப்பான் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசும்போது, நமது தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டிருந்தது. இதை மோடி கவனிக்காமல் இருந்துள்ளார் என்று புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

3 நாட்கள் சுற்றுப்பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெறும் ஆசியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள அண்டை நாட்டுத் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

சீனத் பிரதமர் லீ கெச்சியாங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதன் பின் அவர் ஜப்பான் அதிபர் ஷின்ஸோ அபேயை சந்தித்துப் பேசினார்.

ஜப்பான் அதிபரை மோடி சந்தித்துப் பேசியபோது, மோடியின் அருகில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி தலைகீழாக வைக்கப்பட்டிருந்தது. இதனை மோடி கவனிக்க தவறி உள்ளார்.

இந்நிலையில், இது குறித்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய மோடி

தேசியக்கொடி அவமதிப்பு சர்ச்சையில் மோடி சிக்குவது இது இரண்டாவது முறை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்திய தேசியக்கொடியில் கையெழுத்திட்டு அதை தனது சமையற்காரர் மூலம் ஒபாமாவிடம் கொண்டு சேர்க்கச் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே மூன்று முறை முதலமைச்சராக இருந்து, நாட்டின் பிரதமரான மோடிக்கு தேசியக் கொடி மற்றும் தேசியச் சின்னங்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாதா? என அப்போது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தேசியக்கொடி குறித்த விதிமுறைகளில் ஒன்று, தேசியக்கொடியின் மீது எழுதவோ, அதனை பரிசாக பிறருக்குத் தரவோ அல்லது தேசியக் கொடியை விருந்தினர்கள் கையில் மடித்து வைக்கவோ கூடாது.
 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ