Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உங்களுக்கு சேவை செய்கிறோம்!' - மக்களை வதைத்து வரி வசூலிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்

லகை மிரட்டும் அதி பயங்கரவாத அமைப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உருவாகியுள்ளது. சிரியாவை மையமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு,  கடந்த இரு ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

வளைகுடா நாடுகளான ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான நிலபரப்பு இந்த ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு இஸ்லாமிய புனித அரசு நடைபெறுவதாக ஐ.எஸ். கூறுகிறது. இன்று உலகையே மிரட்டும் இந்த அமைப்புக்கு பல வழிகளில் நிதி கொட்டுகிறது.

ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கிடைக்கும் எண்ணெய் மூலம் பல மில்லியன் டாலர்களை ஐ.எஸ். சம்பாதிக்கிறது. இதற்கென்றே அந்த அமைப்புக்கு தரகர்கள் உள்ளனர். இவர்கள் துருக்கி, ஈரான் போன்ற நாடுகளுக்கு கடத்தி விற்று விடுவார்கள். அதனால்தான் எண்ணெய் கிணறுகளை குறி வைத்து வான் வெளித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

முதலில் இந்த அமைப்புக்கு சன்னி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் அதிக அளவில் நன்கொடை அளித்துக் கொண்டிருந்தனர். எண்ணெய் வளமும் பணமும் கொட்டிக் கிடக்கும் சவுதி அரேபியா, கத்தார் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தனிநபர்கள், இஸ்லாமிய அமைப்புகள்  பணத்தை நன்கொடையாக வாரி இறைத்தன. 

இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது சிரியா அதிபர் அசாத்தை பதவியில் இருந்து நீக்குவதாகவே இருந்தது. இவர் இஸ்லாமிய அலாவைட் பிரிவை சேர்ந்தவர் என்பதால், சன்னி மக்கள் அவர் பதவியில் இருக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர்.

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பு தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை மிரட்டி,  பணம் சம்பாதிக்கிறது. அதாவது 'உங்களுக்கு சேவை புரிகிறோம்' 'உங்களுக்கு பாதுகாப்பளிக்கிறோம் ' என்றெல்லாம் மிரட்டி பண வசூல் நடத்துகிறது.

தீவிரவாத செயல்கள் மட்டுமல்ல,  பணக்காரர்களை குறிவைத்து கடத்திசென்று மிரட்டி பணம் பறிப்பது, பிணைக்கைதிகளை பிடித்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பதும் ஐ.எஸ் அமைப்புக்கு வருமானம் வரும் பிற வழிகள்.

கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் 20 மில்லியன் டாலர்களை ஐ.எஸ். அமைப்பு ஆள்கடத்தல் வழியாக  சம்பாதித்தாக கூறப்படுகிறது.

சிரியாவிற்குள் வரும் வெளிநாட்டினர், செய்தியாளர்களை கடத்துவதில் ஐ.எஸ். எப்போதும் குறியாக இருக்குமாம் . இதில் செய்தியாளர்களை கடத்துவதில் ஐ.எஸ். அமைப்புக்கு கூடுதல் அணுகூலம் இருக்கிறதாம். இவர்களை கடத்தினால் ஐ.எஸ்க்கு உலகம் முழுக்க விளம்பரமும் கிடைக்கிறதாம்.

இது தவிர புரதான பொருட்களை கொள்ளையடித்து விற்பதும், வங்கிகளை கொள்ளையடிப்பதும் ஐ.எஸ். அமைப்புக்கு வருமானம் கிடைக்கும் பிற வழிகள்.

கிறிஸ்தவர்கள் போன்ற பிற மதத்தினர் மீது 'ஜிஸ்யா' என்ற சிறப்பு வரி விதிக்கப்படுகிறது அல்லது அவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறி விட வேண்டும்

கடத்தப்பட்ட பெண்கள், சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்றும் பணம் ஈட்டுவதோடு, அவர்களை பாலியல் அடிமையாகவும் பயன்படுத்துகிறது ஐ.எஸ் அமைப்பு. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ