Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகள் தாக்குதல் :பிரான்சுக்கு ரஷ்யா நாய்குட்டி பரிசளித்தது ஏன்?

ண்மையில் பாரிஸ் நகரில் நடந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாரிசில் பிரெஞ்சு போலீசார் பயங்கரவாதிகளை  வேட்டையாடத் தொடங்கினர். தேடுதல் வேட்டையின் போது,  போலீசாருக்கு உதவியாக இருந்த பெல்ஜியன் ஷெபர்ட் ரகத்தை சேர்ந்த துப்பறியும் நாய் டீசல் இறந்து போனது.

இதையடுத்து பிரான்ஸ் போலீஸ் துறைக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை ஜெர்மன் ஷெபர்ட் ரக நாய்குட்டி ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளது. பிரான்ஸ் மக்களுக்கும், போலீஸ் துறைக்கும் ரஷ்யாவின் ஆதரவு என்றும் உண்டு, என்பதை வலியுறுத்தும் வகையிலும் டீசலின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையிலும்  இந்த நாய்குட்டியை பிரான்சுக்கு ரஷ்யா பரிசளித்துள்ளது.

பிரபல ரஷ்ய மொழி பாடகர் டோப்ரின்யா நிகிட்ச்சின் பெயர்தான் இந்த நாய் குட்டிக்கும் சூட்டப்பட்டுள்ளது.பிறந்து இரண்டே மாதமான இந்த நாய்குட்டி தற்போது மாஸ்கோ போலீஸ் மையத்தில் உள்ளது.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி பாரிசில் அப்தில்ஹாமித் அபாத் என்ற தீவிரவாதியை பிடிக்க நடத்திய தாக்குதலின் போது பிரெஞ்சு போலீஸ் துறையை சேர்ந்த 7 வயது பெல்ஜியன் ஷெபர்ட் ரக நாய் டீசல் இறந்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ