Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படையில் ரஷ்யா பங்கேற்க ஒபாமா நிபந்தனை!

வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப்படையில்,  ரஷ்யா பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய நிபந்தனை விதித்துள்ளார். 

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமாகியுள்ள நிலையில், 65 உலக நாடுகள் அவர்களை எதிர்க்கும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யா, சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத்தை பாதுகாக்கவும், அந்நாட்டு அரசுக்கு உதவும் வகையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கில் ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, "ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தீவிரவாதிகளை ஒழிக்க மட்டுமே தாக்குதல்களை நடத்தவேண்டும் என இயங்கினால் 65 நாடுகள் இணைந்துள்ள படைக்கு ரஷ்யாவை வரவேற்போம்" என்று தெரிவித்துள்ளார். 

     

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே மற்றும் அமெரிக்க அதிபர்  ஒபாமா கூட்டாகச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " சிரியாவில் போராட்டக்காரர்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள், அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பலப்படுத்ததான் உதவும் என்றே நானும் ஹாலண்டேவும் கருதுகிறோம். பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி,  அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் எழுச்சிக்கு உதவிகரமாக இருந்து வருகின்றது.

ஆசாத்தின் ஆட்சியை நிலைக்க செய்வதில் விருப்பம் காட்டி வரும் ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதில் தனது நோக்கத்தைத் திசை திருப்பினால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ரஷ்யா மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியதாக அது அமையும். இல்லாவிட்டால், வியன்னா மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகளின்படி சிரியாவில் உள்நாட்டுப் போர் நிறுத்தம் ஏற்படவும், அதிபர் ஆசாத்திடம் இருக்கும் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசிடம் ஒப்படைக்கவும் ரஷ்யா முழுமுயற்சி எடுக்க வேண்டும்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை ஒழிப்பதற்கு,  அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான பன்னாட்டுப் படையில் 65 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ரஷ்யாவும், ஈரானும் ஆசாத்தை ஆதரிக்கும் தனி அணியாக செயல்படுகின்றன. சிரியா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் எங்கள் படைக்கு ரஷ்யாவை வரவேற்போம்" என்று தெரிவித்தனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close