Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துனிஷியாவில் அதிபரின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்; 12 பேர் பலி: அவசரநிலை அமல்!

துனிஷ்: வடக்கு ஆப்ரிக்க நாடான துனிஷியாவில், அதிபரின் பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
தலைநகர் துனிஷில், அதிபரின் பாதுகாவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென வெடித்துச் சிதறியதில், அதில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். இது தற்கொலைப் படை தாக்குதல் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்த துனிஷிய அதிபர் பெஜி கய்டு எஸிப்சி, நாடு முழுவதும் 30 நாட்கள் அவசர நிலையை பிரகடனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். துனிஷ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
துனிஷியாவில் இந்த ஆண்டு நடத்தப்படும் 3 வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் துனிஷில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டன. துனிஷியா, கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close