Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஷ்ய போர் விமானத்துக்கு ரேடியோ வழியாக எச்சரிக்கை விடுத்த துருக்கி ( ஆடியோ)

துருக்கி வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன், அந்த விமானத்துக்கு ரேடியோ வழியாக பல முறை எச்சரிக்கை விடுத்ததாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
              

மேலும் இது தொடர்பான ஆடியேவையும் துருக்கி அரசு வெளியிட்டுள்ளது. அதில், '' நீங்கள் துருக்கி வான் எல்லைக்குள் நுழைந்துள்ளீர்கள். உடனடியாக தெற்கு நோக்கி பயணத்தை மாற்றுங்கள்என்று  ஆங்கிலத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது, இது போல் 10 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தற்போது துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

வீழ்த்தப்பட்ட  விமானம் ரஷ்யாவின் சுகோய்- 24 ரகத்தை சேர்ந்தது.  எப்-16 ரக போர் விமானத்தில் இருந்து ஏவுகணையை ஏவி ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறுகிறது . இதில் பைலட் ஒருவர் கொல்லப்பட்டார். சுட்டுத்தள்ளப்பட்ட விமானம்  சிரிய எல்லைக்குள் போய் விழுந்தது.

இந்த விமானத்தின் வழிகாட்டும் நேவிகேட்டர், தற்போது சிரிய  ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார். எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன் உடனடியாக துருக்கி வான் எல்லையை விட்டு விலகி சென்று விட்டதாக அவர் கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ