Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த ஈழ மாணவன்!

லங்கையில் போர் முடிவின்போது கைதான அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி, யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இந்துக் கல்லூரியில் செந்தூரன் என்ற மாணவர் (18) படித்து வந்தார். இந்நிலையில், போர் முடிவில் கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஓடும் ரயில் முன் பாய்ந்து இன்று அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை பற்றி அந்த மாணவர் எழுதி இருக்கும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், "தமிழ் ஈழத்திற்கு விடுதலையைக் கொடு, ஒளியையூட்டு, அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னுமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும் உங்கள் செந்தூரன்” என்று கூறப்பட்டுள்ளது.

கைதிகள் மற்றும் அங்குள்ள மக்கள் முகாம்களில் இன்னும் சித்ரவதைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் வந்துள்ள அறிக்கைகளை தொடர்ந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் ஈழ விடுதலையில் மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் மாவீரர் நாள் நாளை வர இருக்கும் நிலையில்,  புலிகளின் கொடி பறக்கக்கூடாது, மேலும் மாவீரர் நாள் கொண்டாட சிங்கள அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், இந்த மாணவரின் தற்கொலை சிங்கள அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

-ரமணி மோகனகிருஷ்ணன்

(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close