Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆரஞ்சு தி வேல்டு': பெண் வன்முறைக்கு எதிரான ஐ.நா.வின் பிரசாரம்!

வம்பர் 25, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். அன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ‘ஆரஞ்சு தி வேல்டு’ என்ற தலைப்பில் ஐ.நா.சபை தன் விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் துவக்கியது.


நவம்பர் 25 முதல் உலக மனித உரிமை தினமான டிசம்பர் 10ம் தேதி வரையிலான 16 நாட்கள் நடக்கும் பிரசாரங்கள் மூலம், 'பெண் வன்கொடுமைகளைத் தடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு வழிவகுக்க வேண்டும்' என்ற கருத்தை,  உலகம் முழுவதும் பரவலாக்கவே இந்த ஆரஞ்சு தினக் கொண்டாட்டம். இதற்காக இம்முறை இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ ஆரஞ்சு வண்ண விளக்குகளால் கடந்த புதன்கிழமை மிளிர்ந்தது. பெண் பாதுகாப்பைப் பேண உலகம் முழுவதும் பல்வேறு விதமான போட்டிகள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள், கூட்டங்கள், பேரணிகள், உலக நினைவுச் சின்னங்களை ஆர்ஞ்சு நிறத்தில் அலங்கரித்தல் என ஐ.நா. தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.


உலகளவில், மூன்றில் ஒரு பெண் பாலின வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளாள் என்ற ஐ.நா. சபையின் புள்ளிவிபரம், பாலின வேறுபாடுகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், மனித உரிமை மீறல்களையும் காட்டுகின்றது. பாலின பாகுபாடுகள் கடந்த சமத்துவம் ஏற்பட, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்து அவர்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தித்தர, இவ்வுலகம் ஆண்-பெண் பேதம் மறந்து முன்வர வேண்டும் என ஐ.நா. வேண்டுகிறது.

70 நாடுகளுக்கு மேல் பங்குபெறும் இந்நிகழ்வில் எகிப்து பிரமிடுகள், ஐ.நா. தலைமையகம், நியூயார்க் எம்பயர் ஸ்டேட் கட்டடம், இந்தியா கேட் எனப் பல நினைவுச் சின்னங்கள் ஆரஞ்சாக மிளிர்ந்தன. ஐ.நா. வின் விளக்கக் குறிப்பேட்டின் படி ஆரஞ்சு நிறம், பெண் வன்முறைக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.
 
ராகினி ஆத்ம வெண்டி
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ