Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதிகளுடனான வர்த்தகத்துக்காக விமானம் சுடப்பட்டுள்ளது: புதின் குற்றச்சாட்டு!

பாரீஸ்: ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க எங்கள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி,  ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதனால், துருக்கிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்து உள்ளது.

ரஷ்ய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று துருக்கி தெரிவித்து உள்ளது. ஆனால், எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று ரஷ்யா மறுத்து உள்ளது.

மேலும், இதைத் தொடர்ந்து போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் என தனது ராணுவ பலத்தை சிரியாவை சுற்றிலும் ரஷ்யா அதிகரித்து உள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று நடந்த பாரிஸில் பருவ நிலை குறித்த மாநாட்டின்போது செய்தியாளர்களை சந்தித்தார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது, ''ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் துருக்கிக்கும் இடையே நடைபெறும் எண்ணைய் வர்த்தகத்தை பாதுகாக்க,  எங்கள் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close