Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இங்கிலாந்து இழக்கும் - ஆய்வு

ங்கிலாந்து நாடு விரைவில்  கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இழக்குமென்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

உலகில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மக்கள் சதவீதத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வசிப்பது இங்கிலாந்து நாட்டில்தான். தற்போது இந்த நாட்டில்  இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இது குறித்து இங்கிலாந்து கிறிஸ்தவ ஆலயங்களின் தலைமை அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த 150 பக்க அறிக்கையில், பல்வேறு காரணங்களால் இங்கிலாந்தில் பிற சமய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் கூட சிறந்து விளங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தமளிக்கும் விஷயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ