Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனமழையால் மிதக்கும் கிளிநொச்சி (வீடியோ)

லங்கை கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழையால் அந்த நகரமே நீரில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழையால் அனைத்து குளங்களுக்கும் நீர் வந்தவாறே உள்ளது. இதனால், குளங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஊழியர்களும் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள் வெள்ள நீரில் மிதந்து பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

அங்குள்ள இரணைமடு, அக்கராயன், வன்னேரி, கரியாலை நாகபடுவான், குடமுருட்டி, புதுமுறிப்பு கனகாம்பிகை, கல்மடும் பிரமந்தலாறு ஆகிய குளங்கள் 24 மணிநேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.


குளங்கள் உடைய வாய்ப்பில்லை என்றும், தாழ்வான பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் எந்தவித பயமும் கொள்ளத்தேவையில்லை என கிளிநொச்சி நீர்பாசன பொறியியலாளர் குணரத்தினம் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ