Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மழை: நாசா வெளியிட்ட பிரமிப்பு வரைபடம்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையை காட்டும் வரைபடத்தை நாசா வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 1 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த மழையின் உக்கிரத்தை காட்டும் இன்னொரு அனிமேஷனையும் நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இஞ்ச் அளவுக்கு இங்கே மழை கொட்டித் தீர்த்திருப்பதை நாசாவின் செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன.

 

இது குறித்து நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறுகையில், "தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும்.

இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை" என்றனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ